மறைந்தும் மறையாதமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் மரணித்துபத்தாண்டுகள் பறந்தோடின…

ravi-raj-image-22இருண்டயுகமாககாணப்பட்டஈழத்தமிழர்களின் அரசியல் யுகத்தில் 1985ம் ஆண்டளவில்  ஒருவிடிவெள்ளிதோன்றியது. ஆமாம்!வயதில் ஒருசட்டத்தரணியாகவும் மனிதஉரிமைசார்ந்தவிடயங்களில் அக்கறைகொண்டவருமானதிருநடராஜா ரவிராஜ் அவர்கள் தமிழ் மக்களினால் அறியப்படும் வகையில் அரசியலுக்குள்ளநுழைந்தார். ஏற்கெனவேபல்வேறுவகையில் தனதுபங்களிப்புக்களைஈழத்தமிழர்களுக்காகவழங்கிவந்தஅவர் மனிதஉரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டுகுமுறினார். அதன் விiவாகவேதமிழ் மக்களி;ன் நலன் காக்கவும் ஏனைய சமூகங்களுக்குஅநீதி இழைக்கப்படும் போதுகுரல் கொடுக்கவும் தீ;ர்மானித்துஅரசியல் பாதையைதேர்ந்தெடுத்தார். இந்தஅரசியல் பயணத்தில் சுமார் இருபதுவருடங்கள் தீவிரமாகஈடுபட்டுமக்களுக்காகஉழைத்தஅவரைபேரினவாதசக்திகள் விட்டுவைக்கவிரும்பவில்லை. மும்மொழியையும் சரளமாகப் பேசி இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் தமிழர் தொடர்பானமுக்கியவிடயங்களையும் தெளிவாகக் கூறியும் குறிப்பாகசிங்களஊடகங்களில் கூட துணிச்சலாகபலகருத்துக்களைதெரிவிக்கஅஞ்சாதஒருகருத்துப் போராளியைகபடத்தனமாகதீர்த்துக்கட்டதீர்மானித்தனரபேரினவாதக் கயவர்கள். அவர்களின்  கொலைவெறிக்கு 2006ம் ஆண்டுபலியாகிப் போனவரேதிருநடராஜா ரவிராஜ்  அவர்கள்.

யாழ்ப்பாணம் தென்மராட்சிசாவகச்சேரியைபிறப்பிடமாகக் கொண்டரவிராஜ் சாவகச்சேரிடிறிபேர்க் மற்றும் யாழ்ப்பாணம்  சென் ஜோன்ஸ் கல்லூரிகளில் கல்விகற்றார். இரண்டுபிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகபதிவுசெய்தார். ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்டநிறுவனமானதுபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழானவழக்குகள்,அவசரகாலச் சட்டத்தின் கீழானவழக்குகளுக்காகவாதாடியது. ஊதியத்தைமட்டுநோக்கமாகக் கொள்ளாது,கொழும்பில் மனிதஉரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்துஅரசியலில் நுழைந்தவர் என்பது இங்குகுறிப்பிடத்தக்கதாகும். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனிதஉரிமைகள் இல்லத்தைநடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கியவிடுதலைமுன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டுஅக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.1997 ஆம் ஆண்டுயாழ். மாநகரசபைபிரதிமுதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபைமுதல்வராகவும் தெரிவானார்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றநாடாளுமன்றதேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சிபகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றிபெற்றார்.தனதுபாராளுமன்றஉறுப்பினர் பதவியைதன்னால் முடிந்தவரையிலும் மக்களின் நலனுக்காகவேபயன்படுத்தினார். இலங்கைமுழுவதற்கும் தொடர்ச்சியாகப் பயணம் செய்துஅனைத்துதரப்பினர் மத்தியிலும் தமிழ் மக்கள் பக்கம் இருக்கும் நியாயங்களைஎடுத்துச் சொன்னார். துமிழ் மக்கள் புலம் பெயர்ந்துவாழும் மேற்குலகநாடுகளுக்கும் சென்று,அவர்கள் மத்தியில் பலநம்பிக்கைவிதைகளைத் தூவினார்.

இவ்வாறாகதுணிச்சல் மிக்கஒருஅரசியல் போராளியாகவிளங்கியதிருரவிராஜ் அவர்கள்,2006 நவம்பர் 10ம் திகதிவெள்ளிக்கிழமைஅன்றுகாலை 7:00 மணிக்குஒருசிங்களதொலைக்காட்சியில் நடந்தஒருநேரடிநேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டுவீடுதிரும்பி,அதன் பின்னர் மீண்டும் வீட்டைவிட்டுதனதுவாகனத்தில் வெளியேறியபோதுகாலை 8:45 மணியளவில் கொழும்புநாரகேன்பிட்டியமனிங்டவுனில் உள்ளஅவரதுவீட்டுக்கருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. உடனேயேகொழும்புதேசியமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டரவிராஜ் சிகிச்சைபலனின்றிகாலை 9.20 மணிக்குஉயிரிழந்தார். ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் காவல்துறையைச் சேர்ந்தவருமானலக்சுமன் லொக்குவெல்லஎன்பவரும் இதன்போதுகொல்லப்பட்டார்.

அவரதுஉயில் கொலையாளிகளின் கொலைக் கரங்களுக்கு இரையாகிப் போனபின்னர் ஒரு டி-56 ரகதுப்பாக்கியும் சிலரவைகளும் சம்பவ இடத்தில் இருந்துமீட்கப்பட்டன. இலங்கைபடைத்துறையின் காவல்துறைதலைமைஅலுவலகத்தின் முன்னாலேதாக்குதல் இடம்பெற்றுள்ளதுஎன்பது இங்குகுறிப்பிடத்தக்கது

இவரதுபடுகொலைஉலகத் தமிழர்களின் உள்ளங்களைஉறையவைத்தஒருகொடியசம்பவமாகவேஅப்போதுகருதப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பும் ரவிராஜ் என்னும் அரசியல் போராளிகொல்லப்பட்டதற்குதுக்கம் அனுஸ்டித்தனர். அத்துடன் தமிழீழத்தின் அதியுயர் தேசியவிருதானமாமனிதர் விருது,தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனால் ரவிராஜ் அவர்கள் மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டது.

இவர் தென்மராட்சிபகுதியில் தேர்தலில் வெற்றிஈட்டியதன் காரணமாக, அப் பிரதேசத்தின் பெரும்பாலானபகுதிகளுக்குவீதிபுனரமைப்புமற்றும் மின்சாரபுனரமைப்புபோன்றவை இவரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைஅரசினால் மேல்கொள்ளப்பட்டன. இதன் காரணமாகதென்மராட்சியின் பலசிறியகிராமங்கள் வளர்ச்சிஅடையகாரணமாயிருந்தனஎன்பதைஅப்பகுதிமக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. எனவேதான் அவரதுஉருவச் சிலையொன்றுசாவகச்சேரியில் இன்னும் சிலவாரங்களில் திறந்துவைக்கப்படவுள்ளதுஎன்பதைநாம் குறிப்பிடலாம்.