மனைவியின் ஸ்லீவ் லெஸ் படத்தை ஷேர் செய்து முகமது ஷமி பட்டபாடு இருக்கே..!

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்த தனது மனைவியின் போட்டோவை போஸ்புக்கில் ஷேர் செய்ததன் விளைவாக பல்வேறு விமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் அவர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷமி, மேற்கு வங்க அணிக்காக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்த 26 வயது இளம் வீரராகும். சில மாதங்கள் முன்புதான் இவருக்கு பெண் குழந்தையொன்று பிறந்திருந்தது. தற்போது, முட்டி காயத்தால் இந்திய அணியில் இருந்து விலகியிருக்கும் அவர், பொழுதுபோக்காக, பேஸ்புக்கில் தனது மனைவி, குழந்தையோடு இருக்கும் போட்டோவையும், மனைவியோடு தனியாக எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தார். VIDEO : Mohammed Shami gives befitting reply to his trollers Powered by இந்த போட்டோக்களில் முகமது ஷமி மனைவி ஹசின் ஜகான், ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருந்தார். இதைப்பார்த்த முஸ்லிம் நெட்டிசன்கள் பலரும், பெண் உடலை முழுக்க போர்த்தியபடிதான் போட்டோ ஷேர் செய்திருக்க வேண்டும், இப்படி ஸ்லீவ் லெஸ் இருக்க கூடாது என விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். இதற்கு முகமது ஷமியின் பிற ரசிகர்களும் கமெண்டில், விமர்சனம் செய்துள்ளனர். மற்றொரு கிரிக்கெட் வீரரான முமகது கைஃப் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஷமி மனைவி ஆடை குறித்து பிறர் விமர்சனம் செய்ய கூடாது என டிவிட்டரில் கைஃப் தெரிவித்துள்ளார்.