மனிதர்களை போன்று பசுக்களும் முக்கியம்

ஆல்வார் விவகாரம் பற்றி பேசுபவர்கள் , சீக்கிய கலவரத்தில் நடந்த படுகொலை பற்றி பேசுவார்களா என உ.பி. முதல்வர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ராஜஸ்தானின் ஆல்வார் நகரில் பசுக்களை கடத்துவதாக கூறி மாடு வியாபாரி ஒருவரை கும்பல் அடித்தே கொன்றது. இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.
இது குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது, மனிதர்களை போலவே மாடுகளும் முக்கியம். இயற்கையிலேயே மனிதர்களுக்கும் பசுக்களும் தங்களுக்கே உரிய குணாதிசயங்களை பெற்றுள்ளன. ‘ஒவ்வொறு மதமும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நபரும் அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியது அவர்களுடைய கடமை.
ஆல்வார் சம்பவம் பற்றி பேசுபவர்கள், 1984-ம் ஆண்டு சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை பற்றி பேசுவார்களா ? ராகுலின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் அவரை புறக்கணித்துவிட்டனர்’ என தெரிவித்தார்.