- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

மதுரை அஜித் ரசிகர்களுக்கு துளிர்விட்ட அரசியல் ஆசை
தமிழகத்தில் மற்ற நகரங்களை காட்டிலும் மதுரையில் நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம். அதனால், மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் சாலைகளிலும், பொது இடங்களிலும் அஜித்தின் விவேகம் படத்தை வரவேற்கும் வகையில் அவரது ரசிகர்கள் அந்த படத்தின் போஸ்டர்கள், கட்அவுட்கள், தோரணங்கள் வைத்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
அதில் ‘வெற்றிடத்தை நிரப்ப வரும் விவேகமே’ என குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அஜித் வாழ்த்து பெறுவது போலவும், பின்னணியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நிற்கும் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசியலுக்கு வருவதாகவோ, அரசியல் பற்றிய தனது கருத்துகளையோ இதுவரை அஜித் தெரிவித்தது இல்லை. அவரது திரைப்படங்களிலும் அதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றதில்லை. முன்பு ஒருமுறை தனது கட்டுப்பாட்டை மீறி நடந்ததால் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார். இந்நிலையில், அஜித்தை அரசியலுக்கு வரும்படி அவரது ரசிகர்கள் அழைப்பு விடுப்பது அவர்களுக்கும் மற்ற நடிகர்களின் ரசிகர்களைபோல அரசியல் ஆசை துளிர் விட்டுள்ளதையே காட்டுகிறது.