- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று… – பா.ஜ.க.
பெரியாரின் நினைவு தினமான இன்று, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதி கொள்வோம்” எனக் கூறப்பட்டிருந்தது.
பா.ஜ.கவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு பா.ஜ.கவின் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. ஐ.டி. பிரிவின் தலைவர் நிர்மல்குமார், “கூட்டணித் தலைவர்களும் எங்கள் தலைவர்களும் கேட்டுக்கொண்டதால் அந்தப் பதிவை நீக்கிவிட்டோம். ஆனால், அதில் தெரிவிக்கப்பட்ட கருத்தில் எங்களுக்கு உடன்பாடுதான்” என்று கூறினார்.
உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி சட்னியா? *ராமர் – சீதை, மற்றும் இந்து கடவுள்கள் பற்றி தவறாக பேசி சிரித்த கூட்டம்.. *சாவர்க்கர் பற்றி பொய்களை பரப்பிய கூட்டம்.. இந்த கூட்டம் புரிந்து கொள்ளவேண்டியது, நீங்கள் எறியும் பந்து தான் உங்கள் மீது திரும்பியுள்ளது – பா.ஜ.க. ஐ.டி. பிரிவின் தலைவர் நிர்மல்குமார்