மக்கள் மீது மைத்திரி அரசுக்கு குறைந்தளவு கூட அக்கறையில்லை என்கிறார் மகிந்த

மக்கள் மீது மைத்திரி அரசுக்கு குறைந்தளவு கூட அக்கறையில்லை.தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க முடியும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். ஆனமடுவ பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க தற்போதைய அரசாங்கத்தினால் முடியும்.
ஆனால் அந்த விடயத்தில் அரசாங்கம் எந்த அக்கறையும் இல்லாது இருப்பதாக மகிந்தராஜபக்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் பெற்றதாக எம்மீது குற்றம் சமத்தப்படுகின்ற போதும், அந்த கடன்கள் பாரிய வேலைத்திட்டங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டன.

ஆனால் இந்த அரசாங்கம் பெற்றக் கடன்கள் அனைத்தும் சுயலாபத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போதும், அரசாங்கம் அதனைக் குறைக்கவில்லை.ஆனால் தாம் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் 3 தடவைகள் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன.அதனைக் கண்டு தற்போதைய பிரதமர் ரணில் உடனடியாக எரிபொருள் விலையை குறைக்க தீர்மானித்தார் என்றும் மகிந்த ராஜபக்சா குறிப்பிட்டுள்ளார்.