மக்களை தூண்டிவிட்டு சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் எச்சரிக்கை

மக்களை தூண்டிவிட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும் என்று முதல்வர் கே.பழனிசாமி எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பொது, நிதி உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:

கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்ததால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மத்திய பாஜக அரசின் திட்டத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

முதல்வர் கே.பழனிசாமி:

குண் டர் சட்டத்தில் கைது செய்யப் பட்ட வளர்மதி மீது 6 வழக்கு கள் இருக்கின்றன. நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்க வரும் படி துண்டுப் பிரசுரம் விநியோகித் ததாகவும், அண்ணாமலை பல் கலைக்கழகத்துக்குள் செல்ல முயன்று, அலுவலில் இருந்த பாதுகாவலர்களை திட்டியது தொடர்பாகவும் வழக்குகள் உள் ளன. சேலத்தில் மத்திய அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசியவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டது, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் மறியல் செய்ததாக இரு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

நெடுவாசல் போராட்டத்துக்கு மக்களை தூண்டிவிட்டதாக கரூர் குளித்தலை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கோவையில் சாலை மறியல் செய்ததாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், வளர்மதியை குண்டர் சட்டத்தில் காவலில் வைக்க சேலம் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

ஜனநாயகத்தில் போராடு வதற்கு உரிமை உண்டு. ஆனால், மக்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக் கும்போது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும்.

துரைமுருகன் (திமுக):

குற்றம் செய்வதையே வழக்கமாக கொண்டவர்கள் மீதுதான் குண்டர் சட்டம் பாயும்.

முதல்வர் கே.பழனிசாமி:

மாணவர்களை தூண்டிவிட்டு போராட வைத்துள்ளார். மாநிலத் தில் லட்சக்கணக்கான மாணவர் கள் உள்ளனர். அவர்கள் எல் லாம் இவ்வாறு நடந்து கொண்டி ருக்கிறார்களா? மாணவர்கள் பாதுகாப்பு கருதியும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்:

நாட்டின் ஒற்றுமைக்கும், இறை யாண்மைக்கும் எதிராக யார் நடந்தாலும் குண்டர் சட்டம் பாயும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.