மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் என்று ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாகத் தெரிவித்தார்

மக்களின் நம்பிக்கை,மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல்.அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கமாட்டேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்,

கொழும்பில் செவ்வாயன்று இடம்பெற்ற ´நீதியின் குரல்´ ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய தேசிய முன்னணியாக இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டது, நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி நல்லிணக்கத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்ப தற்காகவே.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். நாங்கள் தனிநபர்களாக இதற்கு தெரிவு செய்யப்படவில்லை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எமக்கு வழங்கப்பட்ட வரமே இது.

அவ்வாறு கிடைத்த வரத்தை பாதுகாப்பதற்காக 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்பட் டு, ஆணைக்குழு நியமிக்கப்பட்ட து. இருப்பினும் துரதிஸ்டவசமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த வரத்தை மீறிவிட்டார். மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டு வருவதற்கு அவர் முயற்சி செய்து வருகிறார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டு வருவது சட்ட விரோதமானது.அதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க போவதில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.