மகிந்த இணங்கினார் என்பதை நிரூபித்தால் பதவி விலகுவேன் – கெஹெலிய

முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் போர் குற்ற நீதிமன்றம் உள்ளிட்ட விடயங்களை விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இணங்கியிருந்தார் என்பதை நிரூபித்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அவரது விஜயத்தின் போது, வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், போர் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம், மனித உரிமை மீறல்களை விசாரிக்கவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கியதாக தற்போதைய அரசாங்கம் சுமத்தி வரும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.