“மகாத்மா காந்தியை சுட்டுவிட்டு கோட்சேவுக்கு மாலை அணிவித்த இந்து மகாசபா செயலாளர்”

மகாத்மா காந்தியடிகள் கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இன்றைய தினம் காந்தியடிகளின் நினைவு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அலிகார் இந்து மகா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே என்பவர் காந்தியின் உருவப்படத்தை தன் கையில் உள்ள துப்பாக்கியால் சுட்டு அதன் பின்னர் அவரது படத்தின் மேல் சிவப்பு நிற திரவம் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் தனது ஆதரவாளர்களுடன் காந்தியின் உருவபொம்பையை தீயிட்டுக்கொளுத்தினார்.

சக்குன் பாண்டே பின் தனது ஆதரவாளர்களுடன் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் இனிப்பு வழங்கினார். இவ்வாறு அவர் கொண்டாடி இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.