- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

மகாநாயக்க தேரர்கள் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிக்கை
(எம்.எம்.மின்ஹாஜ்)
உத்தேச அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கு எந்தவொரு பாதிப் பும் ஏற்படக் கூடாது. அத்துடன் மாகாண சபை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும்போது மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அர சின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் காணப்பட வேண்டும்.
அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்த இரண்டு கடிதங்களிலேயே வலியுறுத்தியுள்ளனர்.
இனவாதம் போன்ற குறுகிய கொள்கைகளுக்குள் தற்போதைய சவால்களை வெற்றி கொள்ள முடியாது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனாலும் நாட்டின் ஒருமைப்பாட்டை முன்னெடுத்து செல்லும் போது உருவாகும் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பான விடயங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் மஹாநாயக்க தேரர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் வடக்கு கிழக்கில் விகாரைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஸ்கிரிய, மற்றும் மல்வத்து மஹாநாயக்க தேரர்களை நேற்று முன்தினம் சந்தித்து ஆசிப்பெற்றார். இந்த சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு குறித்தான மகாநாயக்க தேராகளின் கையொப்பத்துடன் கூடிய இரு விசேட கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஐந்து அம்சங்களை கொண்ட இரு கடிதங்களை மகாநாயக்க தேராகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
பிரதமரிடம் கையளித்த மகாநாயக்க தேராகளின் கடிதத்ததில் மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது,
உத்தேச அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட கூடாது.அத்துடன் மாகாண சபை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கும் போது மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் காணப்பட வேண்டும். அதேபோன்று புதிய அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும்.
தேசிய கொள்கைகளை வகுக்கும் பூரண அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்க வேண்டும். அத்துடன் முக்கியமான சில சந்தர்ப்பங்களின் போது சிங்கள மொழியை மூலாதாரமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
மேற்குறித்த காரணங்களை அடிப்படையாக கொண்டு புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். இதனையே அரசாங்கம் பிரதான கோரிக்கையாக கொண்டு செயற்பட வேண்டும் என மகாநாயக்க தேராகளின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விசேட கோரிக்கைகள் கொண்ட கடிதமொன்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
புதிய அரசியலமைப்பாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு மறு சீரமைப்பு நடவடிக்கையாக இருக்கலாம் இதன்போது அரசாங்கம் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான விசேட அதிகாரங்களை வழங்குவது தொடர்பன விடயங்கள் குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனவாதம் போன்ற குறுகிய கொள்கைகளுக்குள் தற்போதைய சவால்களை வெற்றி கொள்ள முடியாது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனாலும் நாட்டின் ஒருமைப்பாட்டை முன்னெடுத்து செல்லும் போது உருவாகும் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பான விடயங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மஹாநாயக்க தேரர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சரணாலயங்கள் மற்றும் தொல்பொருளியிலுக்கு சொந்தமான காணிகளில் குடியேற்றங்களை அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.அத்துடன் வடக்கு கிழக்கில் விகாரைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.