மகனின் பதவி ஏற்பு விழாவை டிவியில் பார்த்து கைதட்டி ரசித்த மோடியின் தாயார்!

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை,  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வீட்டிலிருந்து டி.வி.யில் மோடியின் தாயார் ஹீரா பென். பார்த்து கைதட்டி ரசித்தார்.
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக  2-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டதையடுத்து, நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
மக்களவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக, நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார்.  அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24  இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பெயர்கள் வருமாறு:-
!)  ராஜ்நாத் சிங்
2) அமித்ஷா
3) நிதின் கட்கரி
4) சதானந்த கவுடா
5) நிர்மலா சீதாராமன்
6)  ராம்விலாஸ் பாஸ்வான்
7)  நரேந்திர சிங் தோமர்
8) ரவிசங்கர் பிரசாத்
9) ஹர்சிம்ரத் கவுர் பாதல்
10)  தவார் சந்த் கெலாட்
11) முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர்
12)  ரமேஷ் போக்ரியால் நிஷான்க்
13) அர்ஜூன் முண்டா
14) ஸ்மிரிதி இரானி
15)  ஹர்ஷ் வர்த்தன்
16) பிரகாஷ் ஜவடேகர்
17) பியூஷ் கோயல்
18) தர்மேந்திர பிரதான்
19) முக்தர் அப்பாஸ் நக்வி
20) பிரக்லாத் ஜோஷி
21) மகேந்திரநாத் பாண்டே
22) அரவிந்த் சாவந்த்
23) கிரிராஜ் சிங்
24) கஜேந்திர சிங் ஷெகாவத்
25) சந்தோஷ் குமார் கங்வார்
26)  ராவ் இந்திரஜித் சிங்
27)  ஜிதேந்தர் சிங்
28) கிரண் ரிஜிஜூ
29) பிரகலாத் சிங் படேல்
30) ராஜ்குமார் சிங் படேல்
31) ஹர்தீப் சிங் பூரி
32) மன்சுக் மாண்டேவியா
33) பஹன் சிங் குலஸ்தே
34) அஸ்வினி குமார் சவுபே
35) அர்ஜூன்ராம் மெக்வால்
37) வி.கே.சிங்
38) கிரிஷன் பால் குர்ஜார்
39) ராம்தாஸ் அத்வாலே
40)  பர்சோத்தம் ரூபாலா
41) கங்காதர் கிஷன் ரெட்டி
42) சாத்வி நிரஞ்சன் ஜோதி
43) பாபுல் சுப்ரியோ
44) சஞ்சீவ் பல்யான்
45) ரத்தன் லால் கட்டாரியா
47) அனுராக் தாகூர்
48)  சுரேஷ் அங்காடி
உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தனர்.
அமைச்சரவையில் இடம்வேண்டாம் என அருண் ஜெட்லி சுஷ்மா சுவராஜ் கூறிவிட்டதால் பதவி ஏற்கவில்லை. மோடி அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.