- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜெனிவாவில் “கொக்கரித்த” திலக் மாரப்பன
போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை அரசு, அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் புதன் கிழமையன்று இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் உரையைத் தொடர்ந்து இலங்கை வெளி விவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். இதன் போதே அவர் இந்தக் கருத்துக்களை
முன்வைத்தார்.
இலங்கைப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. ஐ.நா. நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டவாறு இறுதிப்போரில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படவில்லை. அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும். அதில் வெளி நாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. வடக்கு – கிழக்கில் இராணுவத்தினரிடமிருக்கும் காணிகள் பெருமளவில் விடுவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பான சட்ட வரைவு அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. காணாமற்போனார் அலுவலகம் மேலும் விரிவாக்கப்படும் என்றும் வெளி விவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.