போபாலில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக சாத்வி பிரக்யா

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா தாக்கூர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை 2016 மே மாதம் நீக்கியது. இதனையடுத்தும் விசாரணையை எதிர்க்கொண்டு வருகிறார்.

ஜாமீனில் வெளியே வந்துள்ள சாத்வி பிரக்யா, பா.ஜனதாவில் இணைந்துள்ளார். இதனையடுத்து அவரை மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.பி., தலைவநகர் போபால். இங்கு 1989 முதல் பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது. கடைசியாக இங்கு 1984ல் தான் காங்., வெற்றி பெற்றது.தற்போது இங்கு காங்., சார்பில் திக்விஜய் போட்டியிடுகிறார். இங்கு பா.ஜ., சார்பில் சாத்வி நிறுத்தப்பட்டுள்ளதால் திக்விஜய் நிலைமை சிக்கலாகி விடும் என்கிறார்கள் அம்மாநில பா.ஜ., கட்சியினர்.

சாத்வி ஒரு இந்து தீவிரவாதி என்று காங்., கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பில் சாத்வி குற்றம் அற்றவர் விசாரணை நடத்திய தேசிய புலனாய் ஏஜென்சி கூறியது. இருப்பினும் வழக்கில் இருந்து சாத்வி விடுவிக்கப்படவில்லை. அவர் தற்போது ஜாமினில் உள்ளார்.
சாத்வி கூறும்போது, ‛‛மன்மோகன் சிங் அரசில் வழக்கு விசாரணையின் போது நான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன்” என்று குற்றசாட்டி இருந்தார். இதனாலேயே சாத்வியால் இப்போதும் சரியாக நடக்க முடியாது.

குண்டுவெடிப்பு வழக்கில் 8 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்கு காரணம் திக்விஜய் தான். திக்விஜய் ஒரு இந்து விரோதி என்று சாத்வி நினைக்கிறார். மாலேகான் குண்டு வெடிப்பு நடந்ததும், இந்து தீவிரவாதம் துவங்கி விட்டது என்று புகார் கூறியவர் திக்விஜய்.லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று திக்விஜய் கேட்டதுமே, கடினமான ஒரு தொகுதியில் தான் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று கூறிய ம.பி., முதல்வர் கமல்நாத், போபாலை திக்விஜயிடம் கொடுத்து விட்டார்.

சாத்வி, ம.பி., மாநிலம் பிந்த் மாவட்டத்தில் லஹர் என்ற இடத்தில் பிறந்தார். வரலாறு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். படிக்கும்போதே ஆஸ்.எஸ்.எஸ்., உடன் தொடர்புள்ள மாணவர்கள் அமைப்பான ஏ.பி.வி.பி மற்றும் பெண்கள் அமைப்பான துர்கா வாஹிணி ஆகிய அமைப்புகளில் பணியாற்றினார். ஆவேசமாக பேசக் கூடியவர்.இப்போது பா.ஜ.,வில் சேர்ந்து முழு அரசியல்வாதியாகி விட்டார். திக்விஜய்க்கு இவர் சரியான போட்டியை தருவார் என எதிர்பார்க்கின்றனர்.