- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும் – கனிமொழி எம்.பி.
மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும். படிக்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அவற்றை மக்கள் மீது திணிக்கிறது.
நாட்டில் இன்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. நாட்டில் ஒருவர் மதம், பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் சாதியை மாற்ற முடியாது.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரியானது அல்ல என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. எதன் அடிப்படையில் 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடித்தது? 10% இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.