பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு அரசு வேலை, கல்வித்துறையில் 10 சதவீத இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டி ராஜ்யசபா கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு அரசு வேலை, கல்வித்துறையில் 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பல்வேறு கட்சிகள் எதிர்ப்பும்,ஆதரவும் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக இன்று ( ஜன.8) பார்லி.யில் லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் ராஜ்யசபாவிலும் மசோதாவாக்க உள்ளது.

இந்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் இன்று (ஜன.8) நிறைவடைவதால், மேலும் ஒரு நாள் நீட்டிக்க கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டி ராஜ்யசபா கூட்டத்தொடரை நீட்டிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டதால் கூட்டத்தொடரை மேலும் ( ஜன.8 வரை ) ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.