பொருட்செலவுள்ள படங்களில் பெரிய சுமைகள் இருக்காது – இயக்குநர் அஜய் ஞானமுத்து நேர்காணல்

‘டிமாண்ட்டி காலனி’ மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அஜய் ஞானமுத்து, தற்போது ‘இமைக்கா நொடிகள்’ மூலம் மீண்டும் தன்னை நிரூபிக்கத் திரும்பியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ள நிலையில் அவரைச் சந்தித்தோம்.
‘இமைக்கா நொடிகள்’ படத்தின் கதைக்களம் என்ன?
சென்னையில் வசிக்கும் ஜோடி அதர்வா – ராஷி கண்ணா. பெங் களூருவில் இருக்கும் சிபிஐ அதி காரி நயன்தாரா. இவர்கள் இரு வருக்கும் தொலைபேசி வாயிலாக சவால் விடுகிறார் வில்லன் அனுராக் கஷ்யப். தொடர்ச்சியாகக் கொலை கள் செய்யும் சீரியல் கில்லர். அவர் எதற்காக இந்தக் கொலை களைச் செய்கிறார் என்ற தேடல் தான் கதை. இப்படத்தில் அனுராக் கஷ்யப் நடிக்கும் கதாபாத்திரத் தில் முதலில் கெளதம் மேனன் நடிப்பதாக இருந்தது.
இப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்திலும் முதலில் ஒரு நாயகன் நடிப்பதாக இருந்ததாமே?
உண்மையில் இக்கதையை எழுதும்போது ஒரு நாயகனை மனதில் வைத்துத்தான் எழுதி னேன். எழுதி முடிக்கும் போதுதான், இந்தக் கதாபாத்திரத்தை திறமை வாய்ந்த ஒரு நடிகை செய்தால் நன்றாக இருக்குமோ என்று தோன் றியது. அதற்காக கதையில் சில மாற்றங்களைச் செய்தபோது அது இன்னும் வலுவானது. நானும், என்னைச் சுற்றியிருப்பவர்களும் இந்தக் கதாபாத்திரத்துக்கு நயன் தாரா மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று எண்ணினோம். அவரும் கதையைக் கேட்டவுடன் நடிக்கச் சம்மதித்தார்.
இயக்குநர் அனுராக் கஷ்யப்பை இயக் கிய அனுபவம் எப்படி இருந்தது? அவர் ஏதாவது ஆலோசனைகளைச் சொன்னாரா?
ஒரு இயக்குநராக அவர் என் னிடம் எதுவுமே பேசவில்லை. படப்பிடிப்பில் முழுக்க முழுக்க ஒரு நடிகராகத்தான் இருந்தார். என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார். அவர் நடித்து முடித்த காட்சிகளை மானிட்டரில் பார்க்கச் சொல்வேன். ‘‘மானிட்டர் எல்லாம் பார்க்க மாட்டேன். உனக்குச் சரி யாக இருந்தால் சொல்லு. சரியாக இல்லாவிட்டால் மறுபடியும் பண் றேன்” என்பார். எத்தனை முறை ரீ-டேக் கேட்டாலும் சளைக்காமல் நடித்துக் கொடுத்தார். சீன் நன்றாக அமைந்தால் பாராட்டிவிட்டுச் செல் வார். டீஸர் தயாரானவுடன் அவரி டம்தான் முதலில் காட்டினேன். “சூப்பராக இருக்கிறது. நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று பாராட்டினார்.