பொது செய்தி தமிழ்நாடு தமிழகத்திற்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் வருகை

தமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் விரைவில் வர உள்ளது.

தமிழகத்தில் ஏப்., 6ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்கு 330 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார். இதன்படி 65 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வந்தது. பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், அங்கு கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் விரைவில் தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.