போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 நாளில் ரூ.750 கோடி வழங்கப்படும்: வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் வேண்டுகோள்

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.500 கோடி யும், தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ரூ.250 கோடியும் அடுத்த 3 நாட்களில் பிரித்து வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் அவர் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர் களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குதல் தொடர் பாக தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத் தப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 8-ம் தேதி தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர்கள் இந்த நிதி போதாது கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டுமென தெரி வித்தனர்.
இதையடுத்து, முதல்வரிடம் மீண்டும் ஆலோசனை நடத்தி கூடு தலாக ரூ.250 கோடி சேர்த்து ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.500 கோடியும், தற்போதுள்ள ஊழியர்களுக்கு ரூ.250 கோடியும் பிரித்து அளிக்கப்படும். இந்த நிதி அடுத்த 3 நாட்களில் ஊழி யர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிலுவை யில் இருக்கும் 8 மாத அக விலைப்படியான ரூ.79 கோடி, அவர்களது வங்கிக் கணக்கில் 12-ம் தேதி (நேற்று) செலுத்தப் பட்டுள்ளது. மேலும், அடுத் தடுத்து கூடுதலாக நிதி ஒதுக் கப்படும் என முதல்வர் உறுதி யளித்துள்ளார். எனவே, வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத் தினோம். ஆனால், பல தொழிற்சங்கங்கள் இதை ஏற்க வில்லை.
கோடை விடுமுறை தொடங்கி யுள்ளதால் மக்கள் வெளியூர் பயணம் செய்ய போக்குவரத்து முக்கியமானதாக இருக்கிறது. எனவே, மக்கள் பாதிக்காமல் இருக்க, போதிய அளவில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் உடனுக்குடன் ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கவும், இதற்கு தீர்வு காண்பது குறித்தும் நிதி, போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர். வேலைநிறுத்தம் இன்றி சுமுக மாக தீர்வு காண விரும்புகி றோம். அப்படியே, அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டாலும் அண்ணா தொழிற் சங்கப் பேரவை, மற்ற 25 ஆதரவு தொழிற்சங்கங்களுடன் நாங்கள் பேருந்துகளை இயக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.