- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்
கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது ‘தி வீக்’ இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் பன்வாரிலால் புரோகித்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் அவரது கன்னத்தை அவர் தட்டிக்கொடுத்தார்.
இது குறித்து செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இத்தகைய செயலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார். கேள்வியை பாராட்டும்விதமாகவே எனது பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டினேன். 40 ஆண்டுகளாக செய்தியாளராக இருந்துள்லதால் அந்த கேள்வியை பாரட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என கூறி உள்ளார். இது குறித்த கடிதம் பெண் பத்திரிகையாளருக்கும் அனுப்பபட்டு உள்ளது.