பெண்ணை எட்டி உதைக்கும் வீடியோ வைரலான நிலையில், பாஜக எம்.எல்.ஏ அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், பாஜக எம்.எல்.ஏ. பல்ராம் தவாணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நரோடா பகுதியின் வார்டு பொறுப்பாளர் நிது தேஜ்வானியை எட்டி உதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

பல்ராம் தவாணியின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதையடுத்து நிது தேஜ்வானி தலைமையில் பெண்கள் சிலர் பால்ராம் தவாணின் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நிது தேஜ்வானியிடம் பால்ராம் தவாணி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், நிது தேஜ்வானி தனது தங்கை போல என்றும் அவருக்கு எப்போது எந்த உதவி வேண்டும் என்றாலும் செய்ய தயார் என்றும் பால்ராம் தவாணி தெரிவித்துள்ளார்.