- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கை
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, சிறையில் திடீர் சோதனை நடத்தினார். சோதனையில், சிறை விதிமுறைகளை மீறி தனி சமையல், சிறையிலிருந்து வெளியே சென்றது உள்ளிட்டவற்றை கண்டுபிடித்தார். விஷேச சலுகைகளுக்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ், சசி தரப்பிலிருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து இப்புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது. கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சசிகலா சிறை விதிமுறைகளை மீறியது உண்மை தான் என தெரிய வந்துள்ளது. மேலும் டி.ஐ.ஜி., ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைதான் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, 2020 பிப்., மாதம் தனது மூன்றாண்டு சிறை தண்டனையை நிறைவு செய்கிறார். இதனையடுத்து நன்னடத்தை அடிப்படையில் சிறையிலிருந்து விடுதலையாக , சசி திட்டங்கள் வகித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் தற்போது கசிந்து, சசியின் விடுதலை கனவை கலைய வைத்துள்ளது.