- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

புளூவேல் ஆன்லைன் விளையாட்டு: மதுரை மாணவர் தற்கொலை
புளூவேல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட மதுரை மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே மொட்டமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் ஜெயமணி என்பவரது மகன் விக்னேஷ் (19). இவர் பசுமலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணையில் விக்னேஷ் தனது இடது கையில் திமிங்கலத்தின் படம் வரைந்தும், புளூவேல் விளையாட்டு குறித்து காகிதத்திலும் எழுதி இருந்தது தெரியவந்தது. எனவே அவர் புளூவேல் எனப்படும் நீலத் திமிங்கல ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புளூவேல் என்னும் ஆன்லைன் விளையாட்டு, அதில் ஈடுபடுவோரை தற்கொலை செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். இந்த விளையாட்டால் பல்வேறு தற்கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மதுரை மாணவர் ஒருவர் இந்த விளையாட்டால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் இந்த விளையாட்டில் ஈடுபட்ட சுமார் 3000 பேர் இதுவரை தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.