“புல்லாங்குழல் நவீன்” ஸ்காபுறோவில் அக்னி இசைக் குழுவோடு இணைந்து நடத்திய இனிதான இசைநிகழ்ச்சி

கடந்த 10ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற கனடா உதயன் சர்வதேச விருதுவிழா -2018 ல் இந்திய சிறப்பு விருதினைப் பெறுவதற்காக வருகை தந்த புல்லாங்குழல் நவீன் அவர்கள் மறுநாள் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோநகரில் உள்ள தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சியிலும் தனது திறமைகளைக் காட்டினார்.

சபையில் அமர்ந்திருந்த கர்நாடக சங்கீத ஆசிரியைகள் மற்றும் பிரதம விருந்தினர் வயலின் வித்துவான ஜெயதேவன் நாயர் மற்றும் சிறப்பு விருந்தினர் மிருதங்கவித்துவான் வாசுதேவன் இராஜலிங்கம் ஆகியே◌hர் நவீன் அவர்களை பாராட்டி நிற்க நிகழ்ச்சி தொடர்ந்தது.பிரதம விருந்தினர் வயலின் வித்துவான் ஜெயதேவன் நாயர் தனது உரையில புல்லாங்குழல் நவீன் அவர்களைப் பாராட்டி அவரோடு சேர்ந்து கனடாவில் கச்சேரி நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

வர்த்தகப் பிரமுகர்கள் திருவாளர்கள் கணேசன் சுகுமார் மற்றும் சங்கர் நல்லதம்பி மற்றும் கெம்சோனிக் ரஜீவ் ஆகியோர் புல்லாங்குழல் நவீன் அவர்களுக்கு முறையே மலர் மாலை,பொன்னாடை மற்றும் அரசாங்கத்தின் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கிக் கௌரவித்தார்கள். அக்னி இசைக் குழுவின் தொகுப்பாளர் திருமதி சில்வியா பிரான்சிஸ் மற்றும் அவரது கணவர் திரு பிரான்சிஸ் ஆகியோர் நிகழ்ச்சியை நகர்த்திச் சென்றனர். அவரது புதல்வரும் இசைக்குழுவின் கீபோர்ட் வாத்தியக் கலைஞருமான ராவ்,புல்லாங்குழல் நவீன் அவர்களால் நன்கு பாராட்டப்பெற்றார். மேற்படி இசை நிகழ்ச்சியை ஏற்று நடத்திய மோட்கேஜ் முகவர் திருவிமால் நவரத்தினம் மற்றும் அறிவிப்பாளர் மொன்றியால் அர்ஜூன் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்த வண்ணம் இருந்தனர்.

கனடாவின் புகழ்பெற்ற இசைக்குழுவான “அக்னி” இசைக்குழுவின் பின்னணி இசையோடு அவர் இனிய புல்லாஙகுழல் இசையை வழங்கினார்.மண்டபம் நிறைந்த சபையோர் மெய்மறந்து இறுதிவரை அமர்ந்திருந்து பாராட்டியும் மகிழ்ந்து ம் சென்றனர். (சத்தியன்)