புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கும் அரசாங்கம்: தேசிய சுதந்திர முன்னணி

இனவாத, பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்களை மகிழ்விப்பதற்காக மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவுக்கு பதவிக்காலத்தை நீடிக்காது அவரை ஒய்வுபெற செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளில் ஆஜராகிய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கிளிநொச்சியை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றி, நந்திக்கடல் களப்பில் புலிகளின் தலைவரை அழித்த 53 வது படைப் பிரிவுக்கு தலைமை தாங்கிய கமல் குணரட்னவுக்கு பணி நீடிப்பு வழங்காது, ஒய்வுபெற செய்துள்ளனர்.

தமக்கு அடங்காத அனைவரையும் வேட்டையாடவே நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது. எனினும் நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலைமையை தெளிவுப்படுத்த வேண்டும்.

இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா செயலாளர் பான் கீ மூன், ருவாண்டாவில் நடந்தது போல், இலங்கையிலும் பாரிய மனித படுகொலை நடந்துள்ளதாக கூறினார்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்த கதையை நியாயப்படுத்த முயற்சித்து வருகின்றனர். பான் கீ மூன் சுமத்துவது போர் குற்றம் இல்லையா?