புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன் கடந்தஒக்டோபர் 18, 24, 25 ஆகியதிகதிகளில் கனடாகந்தசுவாமிஆலயத்தில் பக்தர்கள் அளித்தநன்கொடையின் மூலம் சேர்க்கப்பட்டநிதியான 5041.55 டாலர்கள்அவரின் இருதய சத்திரசிகிச்சைக்கு பயன்படப் போகிறதென்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதற்கு பெருமனதோடு ஒத்துழைப்பு நல்கி உதவி புரிந்த ஆலய நிர்வாக சபைக்கும்,அதன்; தலைவர் திருமுத்து அவர்களுக்கும்,தாங்கள் கொண்டு வந்த தொகை பெரிதோ சிறிதோ அதை அப்படியே அள்ளித் தந்த முருகனின் அடியார்களுக்கு அந்த குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம். இந்த நிதி சேர்ப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

பின்குறிப்பு: இன்னும் பல ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் சிகிச்சைக்கு பணமின்றி தங்கள் மழலை செல்வங்களையும் குடும்ப உறவுகளையும் இழந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களைஉங்கள் உறவுபோல் நினைத்துஉங்களால் இயன்ற நிதியினை கொடுத்து இவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளியினை கொடுக்கும்படிவேண்டுகின்றோம். நீங்கள் தரும் முழுப் பணமும் செலவுகள் ஏதும் அறப்படாமல் முழுமையாக மருத்துவமனைக்கே அனுப்பப்படும் எனவும் தங்களுக்கு அறியத்தருகின்றேன்.நன்றி!

இங்ஙகனம் “நிவாரணம் திருசெந்தில் குமரன் 416 200 7652