புதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு

மத்திய பிரசேத முதல்வராக பொறுப்பேற்றுள்ள கமல்நாத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாநில முதல்வரை தேர்வு செய்ய கடந்த 5 நாட்களுக்கும் மேலாக சிந்தித்து ஒருவழியாக முடிவு செய்தது. இதன்படி ம.பி., முதல்வராக கமல்நாத் இன்று பொறுப்பேற்றார்.

பொறுப்பேற்ற சில நிமிடங்களில் கமல் நாத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அளித்துள்ள பேட்டியில்: கமல்நாத் 1984 கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி. அவரை முதல்வராக்கி இருப்தன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

அகாலி தளம் கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் : சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்புடையவர்களை காங்கிரஸ் காப்பாற்ற முயற்சிக்கிறது என்றார். இது போல் ஆம்ஆத்மி கட்சியும் கமல்நாத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. கமல்நாத்தை நீக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கமல்நாத்துக்கு எதிராக சில சீக்கிய அமைப்புகள் கோர்ட்டுக்கு செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.