பிரியாணிக்காக ‘பாக்ஸிங்’ ஊழியர்களைத் தாக்கிய தி.மு.க : 7 பேர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி பிரகாஷ் (வயது 42), கடையை நிர்வகித்து வருகிறார். கடந்த 28-ந் தேதி இரவு உணவுகள் தீர்ந்து போன நிலையில் விருகம்பாக்கம் தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் பிரியாணி வேண்டும் என்று கேட்க உணவுகள் தீர்ந்துவிட்டன” என்று பிரகாஷ் கூறினார்.
அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் கடையில் இருந்த பொருட்களை கைகளால் தள்ளி விட அப்போது கடை ஊழியர்கள் ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்?” என்று கேட்க ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் பிரகாஷின் முகத்தில் ஓங்கி குத்து விட்டதுடன் தடுக்க வந்த ஊழியர்களையும் அவரது ஆதரவாளர்கள் விட்டு வைக்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவம், கடையில் பொருத்தப்பட்டு உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் (சி.சி.டி.வி.) பதிவாகி உள்ளது.

இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ், கருணாநிதி (33), நாகராஜ் (55) ஆகிய 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் பாக்சர் யுவராஜ், திவாகரன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம், விருகம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரியாணி கடை ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகரன் ஆகியோர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் தாக்குதலுக்குள்ளான பிரியாணி கடைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் கடையில் தாக்குதலுக்குள்ளான ஊழியர்களிடம் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.
இது குறித்து பிரியாணிக்கடை உரிமையாளர் தமிழ் செல்வன், கடைக்கு வந்து ஸ்டாலின் நலம் விசாரித்தது மிகவும் ஆறுதலாக உள்ளது என கூறினார்