பிரிட்டன் பிரதமரை கொல்ல முயன்ற சதி முறியடிப்பு

லண்டன் – பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொல்ல முயன்ற சதி முறியடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்நாட்டு மீடியாக்களில் வெளியான செய்தி: ஐ.எஸ். அமைப்பு மீது நாட்டம் கொண்ட பயங்கரவாதிகள், லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள வீட்டிற்குள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நுழையும் முன்னர் ஐ.இ.டி., வெடிமருந்துகள் மூலம் தாக்குதல் நடத்தி கொல்ல திட்டம் தீட்டியிருந்தனர். இந்த சதி, பல வாரங்களாக பயங்கரவாதிகளை கண்காணித்ததை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ், லண்டனின் வடக்கு பகுதியில் ஜகாரியா ரஹ்மான்(20) என்பவரும், தென் கிழக்கு பிர்மிஹ்ஹாம் பகுதியை சேர்ந்த அகிப் இம்ரான்(21) ஆகியோர் கடந்த நவ.,28 ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜீஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது. கடந்த 12 மாதங்களில் பயங்கரவாதிகளின் 9 சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது