- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவுகிறது !!
உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரசின் தாக்கம் அச்சுறுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆயினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் லண்டனில் அனைத்து மருத்துவ மனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதையடுத்து பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சுகாதாரதுறை செயலர் மாட் ஹான்காக் கூறுகையில், லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கும் ‘கொரோனா வைரசின் புதிய மாறுபாடு’ வல்லுனர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு பிரிட்டனின் பல்வேறு இடங்களில் தற்போதைய நிலையை விட வேகமாக வளர்ந்து வருகிறது.
தெற்கு பிரிட்டனில் இந்த புதிய மாறுபாடுகளுடன் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளை அடையாளம் காண முடிந்தது. இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கப்ப ட்டுள்ளதுடன், பிரிட்டன் விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
புதிய மாறுபாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரியாது. ஆனால் அதன் காரணத்தை பொருட்படுத்தாமல் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.