பிராம்டன் கனடாவில் நடைபெற்ற திருமண வைபவத்தில் வாழ்வாதாரம் வழங்கிய சிறப்பு

டொரொன்டோவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஸ்ரீஸ்கந்தனும் அவரின் துணைவியாரும் தங்கள் மகளின் திருமண நிகழ்வில் நிவாரணம் செந்தில் குமரனின் ஊடாக போரில் வலது பாதத்தை இழந்த மஞ்சுளா ஜெயக்குமார் அவர்களுக்கு மாடு ஒன்றை தானமாக வழங்கியுள்ளனர்.

கொடிகாமத்தை சேர்ந்த மஞ்சுளா தனது கணவர் ஜெயக்குமாரின் சம்பளத்தில் இரு பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்ட நேரத்தில், செந்தில் குமரனின் நிவாரண நிதியத்தை நாட, அவரின் கோரிக்கையை பரிசீலித்து மாடு வாங்க $780 அனுப்பிட்டு விட்டதாக அறியப்படுகிறது. புதுமணத்தம்பதியினருக்கு வாழ்த்துக்கள். இது போன்று அனைவரும் சிந்தித்து செயல்படுவார்கள் என்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு வெகு தூரத்தில் இல்லை. நீங்கள் இப்படி ஒரு உதவியை செய்ய விரும்பினால் செந்தில் குமாரனை நாடலாம். அவரின் தொலைபேசி இலக்கம் 416-200-7652

Leave a Comment