- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பல ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
42 வயதான மக்ரோங், ஏழு நாட்களுக்குத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக எலிசி அரண்மனையில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்ரோங்கின் 67 வயதான மனைவி பிரிஜெட் மக்ரோங்குக்கு எந்த கொரோனா அறிகுறியும் இல்லை என்றாலும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, அதிபர் மக்ரோங், பிரன்ஸ் நாட்டின் நாடாளுமன்றத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதில் பிரான்ஸின் பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல கடந்த திங்கள்கிழமை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான ஓ.இ.சி.டி கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பல நாடுகளின் முக்கியத் தலைவர்கள் பங்கெடுத்தனர்.
கடந்த வாரம், பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஒரு உச்சிமாநாட்டில், பிரான்ஸ் அதிபர் மக்ரோங் உடன், பல்வேறு ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
எனவே, தற்போது பல நாட்டுத் தலைவர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். தங்களின் அதிகாரபூர்வ பயணங்களை அவர்கள் ரத்து செய்திருக்கிறார்கள்.
போர்ச்சுகல் பிரதமர் ஆண்டொனியோ கோஸ்டா, பெல்ஜியம் பிதமர் அலெக்சாண்டர் டி க்ரோ, லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டல் என பல தலைவர்களும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ், நாடாளுமன்ற அவைத் தலைவர் ரிச்சர்ட் ஃபெர்ரண்ட் போன்ற பிரான்ஸின் முக்கிய தலைவர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக, அவர்களின் அலுவலகங்கள் உறுதி செய்திருக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரோ என பல நாட்டுத் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.