பிரான்ஸில் வாழ்ந்த மூத்த நாடகக் கலைஞர் நிர்மலா ரகுநாதன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்

பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற மூத்த நாடகக் கலைஞரான திரைப்பட இயக்குநர் ஏ.ரகுநாதன் (நிர்மலா ரகுநாதன்) கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இலங்கையில் 1960களின் ஒரு சில தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருந்த காலத்தில்  ‘நிர்மலா’ என்கிற திரைப்படத்தினை தயாரித்து வெளியிட்டு நிர்மலா ரகுநாதன் என்று பெயர் பெற்றார். இவர் நாடக துறையிலும், சினிமா துறையிலும் இலங்கை தமிழரிடம் தன் முத்திரை பதித்தவர். இவர் நெஞ்சுக்கு நீதி, புதியகாற்று, தெய்வம் தந்த வீடு திரைப்படங்களிலும் பாத்திரமேற்று பெயர் பெற்றவர்.

பிரான்சில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த, இலங்கையின் இந்த மாபெரும் கலைஞனுக்கு உதயன் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய   பிரார்தித்துக்கொள்கிறது.