- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

பிரபாகரன் குறித்தும் ஈழப் பிரச்சனை குறித்தும் தேவையில்லாமல் பேசுவதை சீமான் நிறுத்தவேண்டும் – இலங்கை தமிழ் எம்.பி
பிரபாகரன் உடனான தனது மலரும் நினைவுகளை மேடைதோறும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிர்ந்துவருகிறார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டகளப்பு எம்.பி. யோகேஸ்வரன், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சீமான் போன்ற அரசியல்வாதிகள் எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, வெறும் பேச்சு பேசுவதாக தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்று கேள்வி எழுப்பினார் யோகேஸ்வரன்.
விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள். ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இங்குள்ளவர் பேசுகிற பேச்சால் தங்களுக்குத் தான் பிரச்சனை என்றார்.
பிரபாகரன் குறித்தும் ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழ் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.