பிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு !!

பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் அளித்த புகாரின் பேரில் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.

2013ம் ஆண்டு தன்னிடம் பாலியல் ரீதியாக அனுராக் அத்துமீறி நடந்து கொண்டதாக நடிகை பால் அண்மையில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு யாரிரோடு என்னும் பகுதியில் வைத்து நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக அனுராக் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அனுராக்கை விசாரணைக்கு அழைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்தக்குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே அனுராக் காஷ்யப் மறுத்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவருடைய முன்னாள் மனைவிகளான ஆர்த்தி பஜாஜ் மற்றும் நடிகை கல்கி அனுராக்கிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தங்களுடைய பதிவுகளை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.