பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது

பூடான் நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பூடான் நாட்டின் 114வது தேசிய நாள் இன்று(டிச.,17) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருதை அந்நாடு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் லோடோய் ஷெரீங் வெளியிட்ட அறிக்கையில்,’பூடானின் உயிரிய விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்,’ எனக்கூறப்பட்டுள்ளது.

மற்றொரு அறிக்கையில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், பூடானுக்கு நிபந்தனையற்ற நட்புறவையும், ஆதரவையும் மோடி வழங்கினார். விருதுக்கு அவர் தகுதியானவர். பூடான் மக்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். ஆலோசனைகளின் போது, சிறப்பான மற்றும் ஆன்மீகவாதியாக உங்களை பார்த்தோம். கவுரவத்தை நேரில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.