பிரதமர் நடத்திய ஆய்வு கூட்டத்தினை முதல்வர் மம்தா புறக்கணித்ததை தொடர்ந்து அதிரடி!!

மேற்கு வங்கத்தில் ‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நடத்திய ஆய்வு கூட்டத்தினை முதல்வர் மம்தா புறக்கணித்த சம்பவத்தை தொடர்ந்து இன்று மேற்குவங்க மாநில தலைமை செயலாளர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் விமானம் வாயிலாக, இன்று காலை மேற்கு வங்கம் வந்தார். பின்னர் பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கரும் வந்தபோது, அம்மாநில அரசு சார்பில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அவர் வரவில்லை. இதனால் பிரதமர் அரை மணி நேரம் காத்திருந்தார். திடீரென வந்த மம்தா, பிரதமரிடம் அறிக்கையை அளித்துவிட்டு, வேறு கூட்டத்துக்கு செல்ல வேண்டி இருப்பதாக கூறி புறப்பட்டுவிட்டார். நாட்டின் வரலாற்றில், இதுவரை எந்த முதல்வரும் இதுபோல ஆணவத்துடனும், பொறுப்பற்ற தன்மையுடனும் பிரதமரிடம் நடந்து கொண்டது இல்லை என கூறப்படுகிறது.

இந் நிலையில், மேற்குவங்க மாநில தலைமை செயலாளர் அலபோன் பந்தோபாத்யாயா அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவர் மத்திய அரசு பணிக்கு அழைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1987-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.கேடரான இவர் இதற்கு முன் கோல்கட்டா மாநகராட்சி கமிஷனர், மற்றும் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இ்ந்நிலையில் மாநில நிதித்துறை செயலாளராக பதிவி வகித்து வந்துள்ள எச்.கே.திவேதி என்பவர் தற்காலிக புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.