பிரசன்னா-சினேகா திரையுலகத் தம்பதி – போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு உதவும் நோக்கோடு 20 இலட்சம்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல முழு இந்தியாவிலுமே வேறு எந்தத் துறையை விட சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள், இயக்குனர் ஆகியோரே அதிக ஊதியம் பெறுகின்றார்கள் என்பது உலகறிந்த உண்மை. தமிழ்நாட்டுப் பத்திரிகை ஒன்று பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய செய்திக் குறிப்பு ஒன்றில்” எவ்வளவோ சிரமப்பட்டு கல்வி கற்று, பட்டம் பெற்று ஐஏஎஸ் பரீட்சையி சித்திபெற்று கலக்டராகவும் உயர் நிர்வாக அதிகாரிகளாகவும் வருகின்றவர்களை விட கோடிக்கணக்கில் அதிகமாக சம்பாதிப்பவர்கள் இந்த நடிக நடிகையர்கள்” என்று..

இவ்வாறு அளவில்லாத செல்வத்தைத் தேடும் சினிமா நடிகர்கள் நடிகைகள் மத்தியில் எத்தனை பேர் தாராள சிந்தையுடன் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றார்கள் என்பதும் வியப்புக்குரிய கேள்வியே ஆகும்.
ஒரு தடவை தன்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்து இந்தளவிற்கு உயர்த்தி விட்ட இயக்குனர் பாலச்சந்தர் நடிகர் ரஜனியிடம் பத்தாயிரம் ரூபாய்கள் அவசரத் தேவைக்காக கேட்டபோது, “இல்லை” என்று மறுத்தவர் அந்த “சுப்பர் ஸ்டார்” என்பதை ஒரு தமிழக சஞ்சிகையில் வாசித்த ஞாபகம்.

இவ்வாறான விடயங்களுக்கு இடையில் ஒரு நல்ல செய்தி….. தமிழக திரையுலகத்திலிருந்து கிடைத்துள்ளது. திரையுலகத் தம்பதியான நடிகர் பிரசன்னாவும் அவரது துணைவியார் நடிகை சினேகாவும் சேர்ந்து தற்போது தமது வாழ்வின் விடிவிற்காக போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு உதவும் நோக்கோடு 20 இலட்சம் இந்தியப் பணத்தை வழங்கியுள்ளதாக அந்த நற்செய்தி கூறுகின்றது. வாழ்க்! இந்த பிரசன்னா-சினேகா திரையுலகத் தம்பதி.