பிக்பாஸ் 3 லொஸ்லியா: “அப்படியா உன்னை வளர்த்தேன்” – மனம் குமுறிய லொஸ்லியா தந்தை மரியநேசன், ஓரமாக நின்ற கவின்

பிக்பாஸ் வீட்டுக்குள் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன்வந்ததாக காட்சிகள் முன்னோட்டத்தில் இன்று ஒளிப்பரப்பட்டன.

பிக்பாஸ் சீசன் 3 கடந்த 79 தினங்களாகத் தினமும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் முகேன் குடும்பத்தினர் நேற்று வந்த வேளையில் இன்று லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் வந்தார்.

பிக்பாஸ் முன்னோட்டத்தில், நா தழும்ப மரியநேசன், ” என்ன சொல்லி வந்த நீ…நான் உன்னை அப்படியா வளர்த்தேன்… கதைக்கக் கூடாது…” என்கிறார்.

சேரன் மரியநேசனை சமாதானப்படுத்துகிறார்.

மரியநேசன், “நாங்கள் அப்படி வளர்க்கவில்லை. தலை குனிஞ்சு வாழக்கூடாது.எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா ” என்கிறார்.

லொஸ்லியா அழுகிறார். கவின் ஓரமாக அமைதியாக நிற்கிறார்.

இவ்வாறாக அந்த முன்னோட்டம் இருக்கிறது.

முகேன் குறித்து அறிய:

“சிறு வயது காதல் தோல்வியால் கோபப்படுகிறார் முகேன்” – ரகசியம் உடைத்த நண்பர்
ஆயிரக்கணக்கான கமெண்டுகள் முன்னோட்டம் வெளியான சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த முன்னோட்ட காணொளிக்குப் பின்னூட்டம் இட்டுள்ளார்கள்.

பெரும்பாலான கமெண்டுகள் கவினை விமர்சித்து உள்ளது.