பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தேசிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை எப்போது வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா.ஜ., கட்சியின் வேட்பாளர் பட்டியலை இன்று கட்சியின் மூத்த நிர்வாகியும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா அறிவித்தார்.

இதன்படி முதல் கட்டமாக 184 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி போட்டியிடுவோர் விவரம் வருமாறு:

வாரணாசி – நரேந்திர மோடி
ராஜ்நாத்சிங் -லக்னோ
நாக்பூர் – கட்காரி
காந்திநகர்: அமித்ஷா
முசாபர் நகர்- சஞ்சீவ்குமார்
மீரட்- ராஜேந்திர அகர்வால்
பாட்பட்- சத்யபால்சிங்
காஸியாபாத்; வி.கே.சிங்
மும்பை: கோபால் ஷெட்டி
அலிகார்- சதீஷ்குமார்
மதுரா; ஹேமாமாலினி
அமேதி: ஸ்மிருதி இராணி,
ரேபரேலி; சந்தோஷ்குமார்
சீத்தாபூர்; ராஜேஸ்வர்மா
சட்டீஸ்கர்: ரேணுகாசிங்
ஜெய்ப்பூர்: ராஜ்யவர்த்தன் ரத்தோர்
பெங்களூரு: சதானந்தகவுடா

தமிழக வேட்பாளர்கள்

தமிழகத்தில் பா.ஜ., போட்டியிடும் 5 தொகுதிகள் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி;

கன்னியாகுமரி: பொன்.ராதாகிருஷ்ணன்
சிவங்கை: எச்.ராஜா
கோவை: சி.பி.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: தமிழிசை சவுந்திரராஜன்
ராமநாதபுரம்: நயினார் நாகேந்திரன்

ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவ்வாறு நட்டா கூறினார்.