- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

‘பா.ஜ.,வில் ஊழல் செய்யாதது மோடி, ஆதித்யநாத் மட்டுமே’
‘பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் ஆகிய இருவர் மட்டுமே, பா.ஜ.,வில், ஊழல் செய்யாதோர்; பிற தலைவர்களை பற்றி, அவ்வாறு கூற முடியாது,” என, உ.பி.,யைச் சேர்ந்த, பா.ஜ., – எம்.பி., கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,ஊழல்,செய்யாதது,மோடி, ஆதித்யநாத்,மட்டுமே
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், கைசர்கஞ்ச் லோக்சபா
தொகுதி, எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரிஜ் பூஷண் சரண் உள்ளார். இவர், காங்., தலைவர், ராகுலை, ‘குரைக்கும் நாய்’ என, விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர்.
இந்நிலையில், கோண்டா மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பிரிஜ் பூஷண் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் ஆகிய இருவர் மட்டுமே, எந்த ஊழலையும் செய்யாதோராக உள்ளனர். இந்த இருவர் மட்டுமே, பா.ஜ.,வில், ஊழலுக்கு ஆட்படாத தலைவர்களாக திகழ்கின்றனர். ஆனால், பா.ஜ.,வில் உள்ள பிற தலைவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பேச்சு, பா.ஜ.,விலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யைச் சேர்ந்த, பா.ஜ., – எம்.எல்.ஏ., சுரேந்திர சிங், ‘அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், கன்னத்தில் அறையுங்கள்; ஊழல் அதிகாரிகளை விட, பாலியல் தொழிலாளிகள் எவ்வளவோ மேல்’ என, சமீபத்தில் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, பா.ஜ., – எம்.பி., பிரிஜ் பூஷண் சரண், சர்ச்சையாக பேசி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.