- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

பாவ மன்னிப்பு முறைக்கு முடிவு: பெண்கள் ஆணையம் பரிந்துரை
பாவ மன்னிப்பு கேட்கும் பெண்களின் ரகசியத்தை வைத்து அவர்களை அச்சுறுத்துவதால், அதனை ஒழிக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், கேரள தேவாலயங்களில் தொடர்ந்து அதிகரித்து வரம் பலாத்காரங்கள், பாலியல் அத்துமீறல்களை பற்றி முறையான விசாரணை நடத்த வேண்டும். பாவமன்னிப்பு கோரும்போது, பெண்கள் கூறும் ரகசியங்களை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டி பாதிரியார்கள், கேரள ஆசிரியரை பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது நமக்கு தெரிந்த சிறிய விஷயம் தான். இதுபோல் மேலும் பல சம்பவங்கள் இருக்கலாம் எனக்கூறினார்.
கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை 4 பாதிரியார்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பெண் ஒருவர் கூறிய பாவமன்னிப்பை, பாதிரியார் வெளியே சொன்னதால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.