பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு !!

கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ மூலக்கல், 55. குருவிளங்காடு தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை, பிராங்கோ மூலக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரி, குருவிளங்காடு போலீசில் புகார் செய்தார். பிரச்னை பெரிதானதையடுத்து, கோட்டயம் போலீசார் 2018-ல் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், மூலக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது.

தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன் மீது கன்னியாஸ்திரி பணம் பறிக்கும் நோக்குடன் பொய்யான புகார் கூறியுள்ளார். நான் நிரபராதி என் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, போலீசாரின் விசாரணை அறிக்கையில் பிஷப்பிற்கு எதிரான ஆதாரம் வலுவாக இருப்பதால் விடுவிக்க மறுத்தார்.