- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

பாலியல் அத்துமீறல்: ஆஸ்திரேலிய கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல் மீது சிறார்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 1990 -ன் பிற்பகுதிகளில், 13 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு விக்டோரியா மாகாணத்தில் உள்ள கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணை முடிவுற்ற நிலையில், கர்டினல் பெல் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதை அடுத்து, கார்டினல் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்ஸிசின் முன்னாள் நிதி அமைச்சரான கார்டினல் பெல், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகே பரோல் பெற அனுமதிக்கப்படுவார் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள 77 வயதான கார்டினல் பெல், தீர்ப்பை எதிர்ப்பு ஜூன் மாதத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.