பார்வையாளர்கள் அதிகரிப்பு: சுதந்திர தேவி சிலையுடன் படேல் சிலையை மோடி ஒப்பீடு

குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலை (182 மீட்டர் உயரம்) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலையை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் இதுபற்றி குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:-

ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 133 ஆண்டுகள் பழமையான சுதந்திர தேவி சிலையை ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம்பேர்தான் பார்த்து வருகிறார்கள். அப்படி இருக்கையில், 11 மாதங்களே ஆன சிலையை தினமும் 8 ஆயிரத்து 500 பேர் பார்ப்பது ஒப்பற்ற சாதனையாகும்.

கடந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் படேல் சிலையை 34 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால், இந்த பகுதிகள் சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன. அதே சமயத்தில், பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல், இந்த இடத்தை சுற்றுலா பயணிகள் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.