பாராளுமன்றின் பாரம்பரியத்திற்கு ஏற்ப செயற்படுவது எமது தவிர்க்க முடியாத கடமை என்கிறார் சபாநாயகர் கரு

பாராளுமன்றின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தினை செவிமடுப்பது சபாநாயக ரி;ன் தவிர்க்க முடியாத கடமை எனவும், இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை உரிய முறை யில் நிரூபிக்க முடியாத அரசியல் கட்சிகள், செய்தியாளர் மாநாடுகளி லும் ஆர்ப்பாட்டங்களிலும் சபாநா யகரிற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எழு த்தின் மூலம் சவால் விடுத்துள்ளனர் என சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதன் காரணமாக சபாநாயகரின் நிலைப் பாட்டை பக்கச்சார்பானது என சித்திரித்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை விட தற்போதைய அரசாங்கத்திற்கு பாராளு மன்றில் பெரும்பான்மையுள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பது விவேக முள்ள செயலாக அமையும் எனவும் சபாநா யகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது