பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா”

கனடாவில் மிக நீண்ட காலமாக இசைத்துறையில் அறிவூட்டல் மற்றும் மேடைநிகழ்ச்சி அத்துடன் சமூக சேவை நிறுவனங்களுக்கு நிதி சேகரிக்கும் பணி ஆகியவற்றில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பாரதி ஆரட்ஸ் கலைக் கூடத்தினர் தறபோது அறிமுகப்படுத்தியுள்ள “பாடவா பாடவா”
(யூனியர் சிங்கர்- கனடா) இசைப் போட்டி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் (First three) முதல் மூன்று வெற்றியாளர்களையும் மேலும் மூன்று வெற்றியாளர்களையும் தேர்ந்தெடுக்கும் போட்டி, மண்டபம் நிறைந்த சபையோர் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள தமிழிசைக் கலா மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

பாரதி கலைக் கூடத்தின் அதிபர் திரு மதிவாசன் தனது பிள்ளைகள் மூவர் மற்றும் பெற்றோர் மாணவர்கள் அத்துடன் வர்த்தகப் பிரமுகர்களின் ஆதரவோடு இந்த போட்டி விழாவையும் பரிசளிப்பு விழாவை நடத்தினார்.

ஏற்கென நடந்த தொடர் போட்டிகளில் பங்குபற்றி இடையில் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட பல பாடக பாடகிகள் நேற்றைய தினம் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடல்களைப் பாடி சபை யேரை மகிழ்வித்தார்கள்.
தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு தெரிவான ஆறு பாடக பாடகிகள் குலுக்கல் சீட்டு மூலம் அவர்களது முறை வழங்கபபட்டு பாடத் தொடங்கினார்கள். பிரதான நடுவர்களாக திருவாளர்கள் கார்த்திக், மோகன் திருச்செல்வம் மற்றும் திருமதி சாயி பிருந்தா ஆகியோர் மி;கவும் பொறுப்புடன் பணியாற்றி தங்கள் கருத்துக்களையும் வெளிப்படையாகக் கூறினார்கள்.
இரண்டு ஆண் பாடகர்களும் நான்கு பெண் பாடகிகளுமாக மிகவும் திறமையாகவும் இனிமையாகவும் பாடினார்கள். சபையோர் கரகோசம் செயயவும் பாடக பாடகி கள் போட்டி போட்;ட வண்ணம் தங்கள் இசைத்திறமைகளைக் காட்டவும் போட்டி நிகழ்சசி முடிவுற்றது.

இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது முதலாவது இடத்தை செல்வி சௌமியா சிங்காரவேலன் பெற அவருக்கான பரிசாக தங்க நெக்லெஸ் ஒன்றை ஸ்காபுறோ ஓமீரா நகைமாளிகை நிறுவன உரிமையாளர்கள் ;திரு. திருமதி சிவா மேகநாதன் தம்பதியினர் அணிவிததனர்.
.
இரண்டாவது இடத்தை செல்வி சின்மை சிவகுமார் பெற, அவருக்கான 750 டாலர்கள் பரிசை வர்த்தகப் பிரமுகரும் கனடா உதயன் வர்த்தக மேம்பாட்டு விருதினையும் பெற்ற திரு சங்கர் நல்லதம்பி வழங்கினார்.

மூனறாவரு இடத்தை 7 வயதுடைய பாடகச் செல்வன் அஜீஸ் திருக்குமாரன் பெற அவருக்குரிய 500 டாலர்கள் பரிசை “நினைவுகள்” நிறுவனர் திரு கனா ஆறுமுகம் வழங்;கினார்.
ஏனைய ஆறு வெற்றியாளர்களுக்கான தலா 200 டாலர்கள் பணப் பரிசை முறையே கேம்சோனிக்ஸ்” அதிபர் திரு ரஜீவ் செபராசா, உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோ கேந்திரலிங்கம், ஈழம் கிச்சின் அதிபர் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த பரிசு வழங்கபபட்ட வகையில் நான்கு பெண் பாடகிகளும் இரண்டு ஆண் பாடகர்களும் பங்குபற்றி இந்தஇறுதிப் போட்டியில் மற்றவர்களுக்கு எலலாம் பணப்பரிசு வழங்கபபட,, முதலாவது பரிசு பெற்றவருக்;கு மட்டு தங்க நெக்லஸ் வழங்ப்பட்டது” என்று வினா பலரின் நெஞ்சைத் துளைத்து நின்றது.
ஆயினும் எமக்கு கிடைத்த தகவல்களின் படி முதலாவது பரிசை வழங்கும் பொறுப்பை விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட ஸ்காபுறோ ஓமீரா நகைமாளிகை நிறுவன உரிமையாளர்கள் ;திரு. திருமதி சிவா மேகநாதன் தம்பதியினர் , பாரதி கலைக் கோவில் அதிபர் திரு மதிவாசன் அவர்களோடு முன்னரேயே செய்து கொண்ட ஏற்பாட்டின் படி ஆண் போட்டியாளர் வெற்றி பெற்றால் தங்கச் சங்கிலி அணிவதாகவும் பெண் போட்டியாளர் வெறறிபெற்றால் தங்க நெக்லெஸ் அணிவதாகவும் தெரிவித்து ஒரே பெறுமதியுடை ய தங்கச் சங்கிலி ஒன்றையும் தங்க நெக்லெஸ் ஒன்றையும் போட்டி விழா அன்று கொண்டு வந்தனர். இறுதியில் பெண்போட்டியாளர் முதலாவது இடத்திற்கு தெர்வாகி வெற்றி பெற்றதும் அவருக்கு தங்க நெக்லெஸ் ஒன்றை ஸ்காபுறோ ஓமீரா நகைமாளிகை நிறுவன உரிமையாளர்கள் ;திரு. திருமதி சிவா மேகநாதன் தம்பதியினர் அணிவிததனர்.
பரிசுகளை வழங்கியவர்களுக்கும் முதலாவது இடத்திலிருநது தொடர்ந்து ஆறு இடங்களைப் பெற்றவர்களுக்கும் கனடா உதயன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொளகின்றான்.