பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் மோதல் !!

செங்கல்பட்டு அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.

பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பாக குஷ்பு கூறுகையில், வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது விபத்து ஏற்பட்டது. கடவுள் அருளால் உயிர்தப்பினேன். இவ்வாறு அவர் கூறினார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.