பாஜகவினர் வெறுப்பு அரசியலில் ஈடுபடுகின்றனர்: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட 6 பேருக்கு 2017-ம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் விருதுகள் வழங்கப் பட்டன.
அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட 6 பேருக்கு விடுதலைச் சிறுத்தைகள் விருது கள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது.
புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கு அம்பேத்கர் சுடர் விருது, கவிஞர் ஓவியாவுக்கு பெரியார் ஒளி விருது, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி தியாகராசனுக்கு காமராஜர் கதிர் விருது, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தைச் சேர்ந்த மெளலவி தர்வேஷ் ரஷாதிக்கு காயிதே மில்லத் பிறை விருதும் வழங்கப் பட்டது.
புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி ஆற்றிய ஏற்புரையில்,‘‘ மதசார்பற்ற அணிகள் பிரிந்திருப் பதால், மதவாத சக்திகள் நாட்டை துண்டாட தலைதூக்கி யிருக்கின்றன. காதலிப்பதும் திருமணம் செய்வதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை.
அதுபோல், ஒருவர் தனக்கு பிடித்த உணவை உண்பதும் தனிப்பட்ட உரிமை. ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான் மையின மக்களை குறிவைத்து தனிமனித உரிமைகளில் தலையிடு கிறார்கள். இந்தியாவை தனிமத நாடாக மாற்ற முயற்சிப்பதை அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திரு மாவளவன் பேசுகையில்,‘‘ தமிழத்தையும் இந்தியாவையும் மிகப்பெரிய ஆபத்து சூழ்ந் துள்ளது. பாஜகவினர் வெறுப்பு அரசியலை ஒரு வலுவான ஆயுதமாக எடுத்துள்ளனர். அதற்கான செயல்திட்டத்தை முதன்மையாக கொண்டுதான் உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்துள்ளனர். அத்தகைய முயற்சியை தமிழகத்திலும் செய்து இங்கு காலூன்ற பார்க் கின்றனர். காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளுடன் நமக்கு முரண்பாடு இருக்கலாம்.
ஆனால், நாட்டை பேராபத்து சூழ்ந்திருக்கும்போது அந்த ஆபத்தை முதலில் எதிர்கொள் வதுதான் சரியாக இருக்கும். எனவே, ஆதிதிராவிடர், பழங்குடி யினர், சிறுபான்மையினர் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக சக்திக ளுடன் இடதுசாரிகள் கைகோர்த்து நாட்டை காப்பாற்ற முன்வர வேண்டும்’ என்றார்.