பாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு

பிரமதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது தன்னுடைய வான்வழியை பயன்படுத்த பாக்., அனுமதி மறுத்துள்ளது.

கடந்த ஆக. 5 ம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய விமானங்கள் தங்களது வான்வழியை பயன்படுத்த பாக். தடை விதித்தது.

இந்நிலையில் வரும் 21-ம் தேதி அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் வான்வழியில் பிரதமர் மோடி விமானம் செல்ல இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இதனிடையே பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி பாக்., வான்வழியே செல்ல பிரதமர் மோடிக்கு அனுமதி வழங்க முடியாது என இந்திய ஹைகமிஷனரிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் வெளிநாடு சென்ற போதும் பாக்., தன்னுடைய வான்வழியை பயன்படுத்த தடை விதித்திருந்தது. தற்போதும் பிரதமருக்கும் அதே போன்று தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.